புதுச்சேரி

பத்துக்கண்ணு சந்திப்பில் நடந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொல்லபள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. உருவ பொம்மையை எரித்த காட்சி.

ஏனாம் எம்.எல்.ஏ. உருவபொம்மை எரிப்பு

Published On 2023-01-08 12:57 IST   |   Update On 2023-01-08 12:57:00 IST
  • ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறி புதுவை முழுவதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
  • பின்னர் திடீரென போராட்டக்காரர்கள் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக்கின் உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறி புதுவை முழுவதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஊசுடு தொகுதி என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் பத்துக்கண்ணு சந்திப்பில் மாநில பிரதிநிதி வைத்தியநாதன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. பின்னர் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அகரம் ஆசிரியர் கணேசன், சேதராப்பட்டு தங்கம், தாமோதரன், சிங்காரவேல், குமரேசன், ரவி, முத்தாலு வெங்கடேசன், காத்தவராயன், ஜனார்த்தனன், சக்திமுருகன், பாஸ்கர், அன்பரசன், முருகையன், பாலு, கோனேரி அரி, வீரப்பன், ரகுராமன், ஆறுமுகம், கணேசன் உள்ளிட்ட என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் திடீரென போராட்டக்காரர்கள் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக்கின் உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் வந்து அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News