புதுச்சேரி

கோப்பு படம்

மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published On 2022-06-08 05:39 GMT   |   Update On 2022-06-08 05:39 GMT
  • மின்துறை ஊழியர்களின் 5 நாள் தொடர் உண்ணாவிரதம்தொ டங்கியது
  • அமைச்சரவை ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை மின்துறையை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து அங்குள்ள பொறியாளர்கள், ஊழியர்கள், ஒருங்கிணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 23-ந்தேதி தொடங்கி விதிப்படி வேலை, எழுத்துப்பணிகளை புறக்கணித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தவும், மின்துறை மந்திரியை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனிடையே தனியார் மயத்தை எதிர்த்து தொடங்கி, செவ்வாய்க் கிழமை வரை 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

போராட்டத்துக்கு போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். போராட்டத்தில் மின்துறை டிவிஷன்1-ன் கீழ் உள்ள மின்துறை அலுவலகங்களை சேர்ந்த ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் டிவிஷன்-1 மின்துறை அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. நாள்தோறும் ஒவ்வொரு டிவிஷனாக செவ்வாய்க்கிழமை வரை மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

Tags:    

Similar News