புதுச்சேரி

கோப்பு படம்.

அரசியல் சூழலால் பாராளுமன்றத்தோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்

Published On 2023-10-20 08:58 GMT   |   Update On 2023-10-20 08:58 GMT
  • அன்பழகன் ஆரூடம்
  • அதேபோல கூட்டணி கட்சியை பலகீனப்படுத்தி, பிளவுபடுத்தி ஆட்சி மாற்றம் செய்வதாக பா.ஜனதா மீது ஏற்கனவே புகார் உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர வையில் ஒரு அமைச்சரை சேர்ப்பதும், நீக்குவதும் முதல்- அமைச்சரின் உரிமை. அந்தவகையில் தனது அமைச்ச ரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சரை முதல்-அமைச்சர் நீக்கினார்.

இதற்கான அனுமதி ஜனாதிபதியிடம் இருப்பதாக தகவல் சொல்கின்றனர். கடந்த காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த சண்முகம், தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கண்ணனை நீக்கினார்.

நீக்கிய ஒரு மணி நேரத்தில் அதற்கான உத்தரவு வெளி வந்தது. இதற்கு முதல்-அமைச்சரின் பரிந்து ரையும், கவர்னரின் ஒப்புதலும் போதும். புதிய அமைச்சரை நியமிக்கத்தான் ஜனாதிபதி வரை அனுமதி பெற வேண்டும்.

அமைச்சரை நீக்க தனியாக கடிதமும், புதிய அமைச்சரை நியமிக்க தனியாக என 2 கடிதம் அளித்திருக்க வேண்டும். என்ஆர்.காங்கிரசுடன் கூட்டணியாக உள்ள பாஜக முதல்-அமைச்சருக்கு திட்டமிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் முதல்- அமைச்சரின் செயல்பாட்டில் பலகீனம் ஏற்படுகிறது. மத்திய பா.ஜனதா மந்திரி ஒருவரும், மாநில பா.ஜனதா மந்திரி ஒருவரும் சந்திரபிரியங்கா நீக்கத்தை தடுத்து நிறுத்துவதாக அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.

இதேநிலை நீடித்தால் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்து விடும். ஏற்கனவே முதல்-அமைச்ச ருக்கு பல்வேறு இடையூறு களை பா.ஜனதா அளித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதேபோல கூட்டணி கட்சியை பலகீனப்படுத்தி, பிளவுபடுத்தி ஆட்சி மாற்றம் செய்வதாக பா.ஜனதா மீது ஏற்கனவே புகார் உள்ளது.

இந்த புகார் புதுவையிலும் எழுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழித்துக்கொள்வது நல்லது. ஒரு அமைச்சர் நீக்கத்துக்கு 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இது நாகரீகமான அரசியலுக்கான வழி அல்ல. இதற்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இரு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழலால் பாராளுமன்ற தேர்தலோடு புதுவை சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News