புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தமிழறிஞர்கள் மனு அளித்த காட்சி.

கல்வி நிறுவனங்களுக்கு மன்னர் மன்னன் பெயர் சூட்ட வேண்டும்

Published On 2022-11-08 05:50 GMT   |   Update On 2022-11-08 05:50 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
  • புதுவையில் உள்ள முக்கிய சாலைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சூட்ட வேண்டும்.

புதுச்சேரி:

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர் மன்னனின் மகனான கவிஞர் கோ.பாரதி தலைமையில் தமிழறிஞர்கள் படைப்பாளி பைரவி, சரஸ்வதி வைத்தியநாதன், நெடுமாறன், தென்றல், இசை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், பிரித்திவிராஜ், செயலாளர் வள்ளி, கீர்த்திகா, லட்சுமி ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் புரட்சிகவிஞர் பாரதிதாசனின் மைந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர் மன்னர் மன்னன் பெயரை புதுவையில் உள்ள முக்கிய சாலைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சூட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

Similar News