புதுச்சேரி

கோப்பு படம்.

டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-01-05 14:33 IST   |   Update On 2023-01-05 14:33:00 IST
  • நீரழிவு நோய் கொடுமையால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இதற்கிடையே அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் பாஷாவுக்கு நீரழிவு நோய் ஏற்பட்டது.

புதுச்சேரி:

நீரழிவு நோய் கொடுமையால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உடையார் குடி கிராமத்தை சேர்ந்த பாஷா (வயது 52) இவருக்கு ஒரு மகனும் 2 மகளும் உள்ளனர். இவரது மனைவி கடந்த 1 வருடத்துக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். மனைவி இறந்த வேதனையில் பாஷா குடிபழக்கத்துக்கு ஆளானார்.

அவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் தங்கி டிரைவர் வேலை செய்து வந்தார். அவ்வப்போது திருவண்டார் கோவிலில் உள்ள உறவினர் நூர் முகமது வீட்டுக்கு சென்றுவருவார்.

இதற்கிடையே அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் பாஷாவுக்கு நீரழிவு நோய் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பாஷாவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பாஷா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நள்ளிரவில் கூரியர் நிறுவனத்தின் பின்புற முள்ள குடோனில் பாஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது உறவினர் நூர் முகமது கொடுத்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News