அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்-அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
- உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் மனு அளித்தார்.
- மேலும் உப்பளம் மெயின் ரோட்டில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் இருந்து பிரான்சுவா தோப்பிற்கு குடிநீர் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் மனு அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
உப்பளம் தொகுதியில் பிரான்சுவா தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, முருகசாமி நகர், ஜெகநாதர் படையாச்சி வீதி, நாராயணசாமி வீதி, என்ஜினீயர் தோட்டம், நேரு வீதி, அன்னை இந்திரா நகர், பல்லவன் வீதி, எல்லையம்மன் கோவில் தோப்பு, ஆட்டுப்பட்டி, ரோடியர் பேட், தாமரை நகர், தமிழ்த்தாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்காக வாணரப்பேட்டை, தாவரவியல் பூங்கா, தாமரை நகரில் ஆழ் துளை கிணறு அமைக்க வேண்டும்.
மேலும் உப்பளம் மெயின் ரோட்டில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் இருந்து பிரான்சுவா தோப்பிற்கு குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார். அப்போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயகம், சகாயம், ராகேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.