புதுச்சேரி

அதிகாரிகள் குழுவினருடன் எதிர்கட்சித்தலைவர் சிவா ஆலோசனை நடத்திய காட்சி.

ரூ.50 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணி

Published On 2022-12-28 10:23 IST   |   Update On 2022-12-28 10:23:00 IST
  • வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகினிப்பேட், பெரியபேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தரமற்று வருவதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
  • பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமை யிலான அதிகாரிகள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி:

வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகினிப்பேட், பெரியபேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தரமற்று வருவதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

அதோடு, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் தொய்வு, பல்வேறு பகுதிகளில் புதிய குடிநீர் குழாய்கள் அமைப்பது, புதிய போர்வெல் அமைப்பது, எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்குகளை எரிய வைப்பது, புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமை யிலான அதிகாரிகள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டையில் ஏ.எப்.டி. குடிநீர் திட்டப் பணியில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைப்பது, சுல்தா ன்பேட்டை, வில்லியனூர், கொம்பாக்கம், ஜி.என். பாளையம், திரிவேணி நகர், ஒட்டாம்பாளையம் வெங்கடேஷ்வரா நகர் ஆகிய பகுதிகளில் புதிய போர்வெல் அமைப்பது, தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட பணிகள் ரூ. 50 கோடி மதிப்பில் மேற்கொள்ள உள்ளதாக தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மேலும், பழுதடைந்துள்ள குடிநீர் தொட்டிகளை உடனடியாக பராமரிக்க வேண்டும், சுல்தா ன்பேட்டை, வில்லியனூர் பத்மினி நகர், கொம்பா க்கம்பேட் ஆகிய 3 இடங்களில் உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து குடிநீர் சுகாதாரமற்று வரும் உத்திர வாகினிப்பேட் பகுதியில் உடனடியாக ஒரு போர்வெல் அமைத்து சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கவும், நெடுஞ்சாலைகளில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், வில்லியனூர் தொகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை மேற்கொள்வது, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலை யை மேம்படுத்துவது, இருபுறமும் மின் விளக்கு, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில், கண்காணி ப்புப் பொறியாளர் பாஸ்கர், செயற்பொறி யாளர்கள் சுந்தர்ராஜன் (பொது சுகாதாரக் கோட்டம்), ராதாகிருஷ்ணன் (நீர்பாசனக் கோட்டம்), உதவிப் பொறியாளர்கள் வாசு, சீனுவாசன், கோபி, மதி, சேகர், இளநிலைப் பொறியாளர்கள் திருவே ங்கடம், சங்கர்,ஞானவேல் மற்றும் வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் ராமசாமி, விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வ நாதன், ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இளைஞர் அணி தொகுதி செயலாளர் மணிகண்டன், ரமணன், கொம்பாக்கம் ஜெகன், ஜெனா, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News