முகத்துவாரம் தூர்வாரும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகிேயார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
- பனித்திட்டு கடற்கரையில் முகத்துவாரம் தூர்வாரும் பணி சபாநாயகர் அமைச்சர் தொடங்கி வைத்தனர்.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பாகூர் கொம்யூன் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட நல்லவாடு மற்றும் பனித்திட்டு கடற்கரை முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கடற்கரை முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணிக்கு புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன அலுவலகம் மூலம் பூமி பூஜை நடந்தது. பனித்திட்டு கடற்கரையில் நடந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் லட்சுமிகாந்தன், எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மணிமாறன், இளநிலை பொறியாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றனர்.