புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மலேரியா துணை இயக்குனர் வசந்தகுமாரியை சந்தித்து முறையிட்ட காட்சி.

வாய்க்காலை தூர்வார வேண்டும்- கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-01-25 13:38 IST   |   Update On 2023-01-25 13:38:00 IST
  • வாய்க்காலை தூர்வாரி, கொசு மருந்து அடிக்காததால், அப்பகுதி மக்கள் பல்ேவறு நோய்களால் பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மலேரியா துணை இயக்குனர் வசந்தகுமாரியை சந்தித்து முறையிட்டார்.
  • இதுகுறித்து பொதுப்பணி மற்றும் நகராட்சி துறையுடன் இணைந்து வாய்க்காலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதியில் உப்பனாறு வாய்க்கால் மற்றும் பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால்களால் நேதாஜி நகர், அவ்வை நகர், உடையார்தோட்டம், வம்பாகீரப்பாளையம், திப்புராயபேட்டை, வாண ரப்பேட்டை பகுதிகளை சுற்றிலும் கழிவுநீர் சூழ்ந்துள்ளது.

வாய்க்காலை தூர்வாரி, கொசு மருந்து அடிக்காததால், அப்பகுதி மக்கள் பல்ேவறு நோய்களால் பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மலேரியா துணை இயக்குனர் வசந்தகுமாரியை சந்தித்து முறையிட்டார்.

அப்போது எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்ற துணை இயக்குனர் இதுகுறித்து பொதுப்பணி மற்றும் நகராட்சி துறையுடன் இணைந்து வாய்க்காலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதில் தி.மு.க. அவைத் தலைவர் ரவி, சந்துரு, கிளை செயலா ளர்கள் ராகேஷ் கவுதமன், லாரன்ஸ் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News