புதுச்சேரி
கென்னடி எம்.எல்.ஏ. வாய்க்கால் அமைக்கும் பணியை பார்வையிட்ட காட்சி.
வாய்க்கால் அமைக்கும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
- புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2-ல் எல் வடிவ வாய்க்கால் மேம்படுத்தும் பணி நேதாஜி நகர் வார்டில் நடைபெற்று வருகிறது.
- பணியினை நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2-ல் எல் வடிவ வாய்க்கால் மேம்படுத்தும் பணி நேதாஜி நகர் வார்டில் நடைபெற்று வருகிறது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சட்டமன்ற நிதியின் கீழ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.அப்பணி தற்பொழுது 80 சதவீதம் நிறைவேறும் நிலையில் உள்ளது. பணியினை நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டனர். அப்பொழுது விடுபட்ட பணியினை தொகுதி மக்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்.
உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ், செழியன், ரகுமான் மற்றும் பலர் உடனிருந்தனர்.