புதுச்சேரி

கோப்பு படம்.

மனைப்பட்டா வழங்கிய பின் வாய்க்கால் அமைக்க வேண்டும்-அதிகாரியுடன் எதிர்கட்சித்தலைவர் சிவா கோரிக்கை

Published On 2022-12-22 14:30 IST   |   Update On 2022-12-22 14:30:00 IST
  • புதுவை அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதுவை-விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
  • மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புதுவை அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதுவை-விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

சாலையின் இருபுறமும் 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடக்கிறது. அதில் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி.என். பாளையம் பஞ்சாயத்து தட்டாஞ்சாவடி மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களை காலி செய்துவிட்டு வாய்க்கால் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.

எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் சிவா அப்பகுதி மக்களுடன், தேசிய நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியத்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்தார். மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே அப்பகுதியில் வசிக்கும் 18 குடும்பத்திற்கு பட்டா பெற்றுத்தந்த பின் காலி செய்ய வேண்டும், அதன்பின் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. ஆதிதிராவிடர் அணி மாநில துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், எழில்மாறன், தங்ககதிர்வேல், சந்தோஷ்குமார், மதிவதணன், முத்தழகன், தமிழ்வாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News