புதுச்சேரி

காரைக்கால் அரசு மருத்துவமனையை கவர்னர் தமிழிசை ஆய்வு செய்த காட்சி.

டாக்டர் - ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்: கவர்னர் தமிழிசை அறிவிப்பு

Published On 2022-06-08 15:07 IST   |   Update On 2022-06-08 15:07:00 IST
  • சுகாதாரத்துறையில் டாக்டர் - ஊழியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கவர்னர்த மிழிசை தெரிவித்துள்ளார்.
  • புறநோயாளிகள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

புதுச்சேரி:

ஒரு நாள் அரசு முறை பயணமாக காரைக்கால் சென்றார். அங்கு கவர்னர் தமிழிசைக்கு மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

மாவட்டத் துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.பின்னர், கவர்னர் தமிழிசை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். புறநோயாளிகள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தைப் பார்வையிட்டார்.சுகாதாரத் துறைச் செயலர் உதய குமார்,கவர்னரின் செயலாளர் அஜித் விஜய் சவுத்ரி, சுகாதார துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, மருத்துவமனை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்கால் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் ஜிப்மர் மருத்துவமனையோடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜிப்மர் மருத்துவ மனையின் ஒத்துழைப்போடு மருத்துவமனையை மேம்படுத்த அரசு திட்டம் உருவாகி இருக்கிறது. கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதியில் உள்ள மக்களுக்கு சிறப்பான சேவைகள் அளிக்கக் கூடிய சிறந்த மருத்துவமனையாக விரைவில் மேம்படு த்தப்படும்.கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மீண்டும் தொட ங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சருடன்க லந்தாலோசனை செய்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் காலிப் பணி யிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

Tags:    

Similar News