புதுச்சேரி

கோப்பு படம்.

2 மணி நேரம் மட்டுமே அனுமதி வெடிக்காத பட்டாசுகளை கையால் தொட வேண்டாம்

Published On 2023-11-11 08:16 GMT   |   Update On 2023-11-11 08:16 GMT
  • தீயணைப்பு துறை அறிவுறுத்தல்
  • உத்தரவுகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் வல்லவன் அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி:

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள், அறிவு றுத்தல்கள் வெளி யிடப்பட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி அதிக ஒலி எழுப்பும் வெடிகள், சரவெடி, பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் 20 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் வல்லவன் அறிவுறுத்தி உள்ளார்.

புதுவை தீயணைப்பு துறை அதிகாரி இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

பட்டாசுகளை நடுவீதியில் கொளுத்துவது ஆபத்தானது. சிறுவர்களோடு பெரியவர்கள் உடனிருப்பது பாதுகாப்பானது. உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட், சீன பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை. தடையை மீறி இதை உபயோகித்து விபத்து ஏற்படுத்தினால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கம்பி மத்தாப்புகளை பயன்படுத்திய பின் தண்ணீரில் போட வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடாமல், நீண்ட குச்சியால் அகற்ற வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடை, காலணி அணிந்திருக்க வேண்டும். குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், முதியோர் இல்லங்கள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தீயணைப்பு அவசர உதவிக்கு புதுவையில் 101 என்ற அவசர சேவை, அந்தந்த பகுதி தீயணைப்பு நிலைய ங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News