புதுச்சேரி

கோப்பு படம்.

கவர்னர் மீது தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2022-10-13 09:47 IST   |   Update On 2022-10-13 09:47:00 IST
  • புதுவை கவர்னரின் சமீபகால செயல்பாடுகள், மாநில அரசின் நடவடி க்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உள்ளது.
  • முதல்வரும், அமைச்சர்க ளும் மத்திய அரசிடம் கேட்ட தொகையான ரூ.3710 கோடியில், சிறிய தொகை யினை கூட மத்திய அரசினை வற்புறுத்தி கவர்னர் பெறவில்லை.

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை கவர்னரின் சமீபகால செயல்பாடுகள், மாநில அரசின் நடவடி க்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உள்ளது. மக்களை சந்தித்து குறைதீர் கூட்டம் நடத்துவது, மத்திய அரசின் நேரடி ஆட்சியினை கொண்டு வருவதற்கான முயற்சியாக தெரிகிறது.

முதல்வரும், அமைச்சர்க ளும் மத்திய அரசிடம் கேட்ட தொகையான ரூ.3710 கோடியில், சிறிய தொகை யினை கூட மத்திய அரசினை வற்புறுத்தி கவர்னர் பெறவில்லை.

மாநிலத்தின் மொத்த கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டும் சூழ்நிலையில், அதில், 50 சதவீதத்தைக்கூட தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவில்லை.

தமிழகத்தைப் போல அரசு பள்ளி மாணவர்க ளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த கோப்பு மத்திய அரசிடம் எந்த நிலையில் உள்ளது. என்பதைக் கூட கவர்னர் அறிய முற்படுவதில்லை.

இது போன்று, மாநில முன்னேற்றப் பணிகள் பல இருந்தும், அவற்றை செயல்படுத்த முயற்சிக்காமல், மின் துறை உள்ளிட்ட அரசின் சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்க்கும் பணியை மட்டும் செய்ய முற்படுவது கண்டனத்திற்குரியது.

மாநில, மத்திய அரசுகளுக்கு இணைப்பு பாலமாக இருக்க வேண்டிய கவர்னர், பா.ஜனதாவின் கொள்கை விளக்க முகவராக செயல்படுவது வேதனை அளிக்கிறாது.

இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

Tags:    

Similar News