புதுச்சேரி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ராசா எம்.பி.யின் உருவ படத்தை கிழித்து எரிந்த காட்சி.

தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து -பெண்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-23 09:29 GMT   |   Update On 2022-09-23 09:29 GMT
  • தி.மு.க. எம்.பி. ராசா இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாக பேசியதை கண்டித்து புதுவை பராசக்தி ஆன்மீக இயக்க மகளிர் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.
  • லாஸ்பேட்ைட உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு பராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

தி.மு.க. எம்.பி. ராசா இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாக பேசியதை கண்டித்து புதுவை பராசக்தி ஆன்மீக இயக்க மகளிர் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.

லாஸ்பேட்ைட உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு பராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பராசக்தி ஆன்மீக இயக்க முன்னணி நிர்வாகிகள் வள்ளி, வெண்ணிலா, மணிமேகலை, வசந்தா, கல்விக்கரசி, மீனா, மகாலட்சுமி, ஜெயா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி அய்யனார் கோவில் வரை சென்றது. அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராசா எம்.பி. படத்தை கிழித்து வீசினர்.

Tags:    

Similar News