புதுச்சேரி

தீப்பிடித்து எரிந்த குளிர்சாதன பெட்டியை படத்தில் காணலாம்.

தி.மு.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தீ விபத்து

Published On 2022-06-13 15:24 IST   |   Update On 2022-06-13 15:24:00 IST
சட்டசபையில் அனிபால் கென்னடி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.அணிபால் கென்னடியின் அலுவலக இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக ஏ.சி. சரிவர செயல்படாமல் இருந்துள்ளது.இந்த நிலையில் இன்று மதியம் ஏ.சி.யில் இருந்து கரும்புகை வெளியேறியது.இதனால் அதிர்ச்சி அடைந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் ஊழியர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அலுவலத்தில் பின் பகுதியில் இருந்த ஏ.சி.யின் இணைப்பு பெட்டியில் மின் கசிவால் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்து சம்பவம் காரணமாக சட்டசபை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News