மாணவர்களுக்கு கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தரராஜன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த காட்சி.
- புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பசுமை பாதுகாப்பு தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் தீபாவளி விழாவினை கண்டுகளித்தார்.
புதுச்சேரி:
புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பசுமை பாதுகாப்பு தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைமை விருந்தினராக புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மழலையர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் தீபாவளி விழாவினை கண்டுகளித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழைலையர்கள் அனைவரும் சேர்ந்து மத்தாப்பு கொளுத்தி தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலை பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.