புதுச்சேரி

கோப்பு படம்.

பாண்லேவில் பவுடர் பால் விநியோகம்-அ.தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2022-10-19 10:57 IST   |   Update On 2022-10-19 10:57:00 IST
  • புதுவை அரசு சார்பு நிறுவனமாக பாண்லே காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு பல ஆண்டுகளாக பால் வழங்கி வருகிறது.
  • பற்றாக்கு–றையை போக்க அவசர கதியில் பாண்லே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

புதுச்சேரி:

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு சார்பு நிறுவனமாக பாண்லே காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு பல ஆண்டுகளாக பால் வழங்கி வருகிறது. பாண்லே அதிகாரிகளின் கமிஷன் பேராசையினால் தற்போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த செயற்கையான பால் தட்டுப்பாட்டினால் புதுவை மாநில மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.பால் பற்றாக் குறையினால் பாலுக்கு பதிலாக பவுடரை கலந்து வினியோகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த செயல் அதிர்ச்சியையும் வேத–னையும் அளிக்கக்கூடியது, இந்த கொடுஞ்செயலை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. பற்றாக்கு–றையை போக்க அவசர கதியில் பாண்லே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பாண்லே பால் குழந்தைகள், மாணவர்களுக்கு அதிக அளவில் பெற்றோர் கொடுக்கின்றனர். பவுடர் பாலால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு எற்படும். மாணவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படும் எனவே, குழந்தைகள், மாணவர்கள் ஆரோக்கியத்துடன் அரசு விளையாடாமல் கொள்முதல் செய்து பாலை வழங்க வேண்டும்.

புதுவை மக்களுக்கு இலவசங்களை வழங்குவது மட்டுமே முதல்-அமைச்சரின் வேலை இல்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு காண்பதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமையாகும்.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து மக்கள் பிரச்சினைகளுக்கும் மவுனம் காப்பதும், அதற்கு பதிலாக கவர்னர் மக்கள் பிரச்சினைகளுக்கு அறிவிப்பு வெளியிடுவது ஜனநாயக கேலிக்கூத்து.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் உறங்கிக் கொண்டிருந்தால் விரைவில் சட்டமன்றம் இல்லா யூனியன் பிரதேசமாக புதுவை மாறிவிடும் என்று அ.தி.மு.க. சார்பில் எச்சரிக்கிறோம்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News