புதுச்சேரி

கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ., பேசிய பொது எடுத்த படம்.

null

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அதிருப்தி-எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சு

Update: 2022-07-06 05:33 GMT
  • தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி பிறந்தநாள்
  • மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் நடைபெற்றது.

புதுச்சேரி:

திருபுவனை தொகுதி தி.மு.க. சார்பில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் நடைபெற்றது.

தொகுதி செயலாளர் செயலாளர் செல்வ.பார்த்திபன், பொறுப்பாளர் முகிலன் அல்லிமுத்து தலைமை தாங்கினர்.புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் 1000 பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து, மகளிருக்கு இலவச பேருந்து, 2 ½ லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, அரசுப்பணிக்கு வாய்ப்பு இழந்த இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு, முந்தைய அரசால் மூடப்பட்ட அனைத்து நூற்பாலைகள், பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு நூற்பாலைகள் திறக்கப்படும்,

தீவிர சிகிச்சைப் பிரிவில் ரூ.5 ஆயிரத்திற்கு அதிகமாகும் செலவுகளை அரசே ஏற்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தனி தொழில்முனைவோர் மையம் அமைத்து தரப்படும். ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ளை அரிசி 30 கிலோ வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தேர்தலின்போது ஆட்சியாளர்கள் வெளியிட்டனர்.

ஆனால் இதில் ஒன்றைக்கூட செய்யவில்லை. பல ஆயிரம் கோடி மதிப்புடைய மின்துறையை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். உள்ளாட்சி தேர்தலையும் நடத்தவில்லை. அரசு காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் புதுவை மக்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். விரைவில் புதுவையில் தி.மு.க. ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தொகுதி பொறுப்பா ளர்கள் கோபால், கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News