கோப்பு படம்
- கரிக்கலாம்பாக்கத்தில் முன் விரோதத்தில் தொழிலாளிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடப்பட்டது.
- இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
புதுச்சேரி:
கரிக்கலாம்பாக்கத்தில் முன் விரோதத்தில் தொழிலாளிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரிக்கலாம்பாக்கம் மேற்கு வீதியை சேர்ந்தவர் முருகன். (வயது43). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும் கடந்த மாதம் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் முருகனின் செல்போனில் பேசிய அரங்கனூரை சேர்ந்த பிரதாப் என்பவர் இனிமேல் ஜெகநாதன் மற்றும் அவரது மகன் வாஞ்சிநாதன் ஆகியோர் விவகாரத்தில் தலையிட்டால் உயிரோடு விடமாட்டேன் என்று தகாத வார்த்தைகளால் திட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
அப்போது அவருடன் இருந்த வாஞ்சிநாதனும் செல்போனில் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதுகுறித்து முருகன் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.