புதுச்சேரி

பரிக்கப்பட்டில் உள்ள குளம் ஆக்கிரமித்து புதர் மண்டி கிடக்கும் காட்சி.

குளத்தை தூர் வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-09-27 07:29 GMT   |   Update On 2022-09-27 07:29 GMT
  • பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது.
  • குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே செல்கிறது.

புதுச்சேரி:

பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது.

இந்த குளம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முழுவதும் இந்த குளத்தில் கலந்து கழிவுநீர் குளமாக மாறிவிட்டது.

மேலும், குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே செல்கிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக அப்பகுதி மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பல்வேறு புகார்கள் இருந்ததால் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு கவர்னராக இருந்த கிரண்பேடி நேரடியாக குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து குளத்தை தூர்வாரி பராமரிக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆனால் அவரது உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.தற்போது இந்த குளம் புதர் மண்டி விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறிவிட்டது. பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்து வருகிறது.

எனவே இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்கவும், நீதிமன்ற உத்தரவுபடி நீர் நிலையில் வசிக்கும் மக்களை வீடற்ற மக்களுக்கு மாற்று இடத்தில் மனைபட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News