புதுச்சேரி
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
திருக்காமீஸ்வரர் கோவிலில் தினமும் அன்னதானம்
- புதுவை அரசு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
- தினமும் 200 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதன் தொடக்க விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
அறக்கட்டளை நிர்வாகிகள் ஜாவர், பாரத் ஜாவர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அன்னதானம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்து அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, திருக்கா மீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தினமும் 200 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.