புதுச்சேரி

கோப்பு படம்

புதுச்சேரியில் 200-ஐ தாண்டியது கொரோனா தொற்று

Published On 2022-07-14 14:36 IST   |   Update On 2022-07-14 14:36:00 IST
  • பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்
  • சமூக இடை வெளி உட்பட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் படிப்படி யாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் அனை வரும் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடை வெளி உட்பட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

புதுவையில் ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 207, காரைக்காலில் 7, ஏனாமில் 7 பேர் என புதிதாக 221 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 7, ஏனாமில் ஒருவர் என 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 882, காரைக்காலில் 101, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 8 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 86, காரைக்காலில் 25, ஏனாமில் 8, மாகியில் ஒருவர் என 120 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.

புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 58 ஆயிரத்து 999 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது பொது மக்களி டையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News