புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்த போது எடுத்த படம்.

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2023-10-14 11:52 IST   |   Update On 2023-10-14 11:52:00 IST
  • மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலையில் மருத்துவ துறைக்கு அர்ப்பணிப்புடன் மாணவ- மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
  • பேராசிரியர் நாயர்இக்பால் உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவ பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பிம்ஸ் மருத்துவமனை தலைமை வழிகாட்டி திலீப்மாத்தாய் வரவேற்றார். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக டெல்லி தேசிய காசநோய் மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும் பிரபல காசநோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் ரோகித் சரீன் கலந்து கொண்டு இளங்கலை மருத்துவ மாணவ- மாணவிகள் 137 பேருக்கும், முதுகலை மருத்துவ மாணவ -மாணவிகள் 35 பேருக்கும் பட்டங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலையில் மருத்துவ துறைக்கு அர்ப்பணிப்புடன் மாணவ- மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 2022ஆண்டின் ஆல்ரவுண்டராக தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவி ராகவலட்சுமி மற்றும் பல்வேறு பாட பிரிவுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர் சுதர்ஷனன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

அதுபோல முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள், மற்றும் சிறந்த மருத்துவ ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப் பட்டனர்.விழாவில் துணை முதல்வர்கள் டாக்டர் மேகி, டாக்டர் ஸ்டாலின், பேராசிரியர் நாயர்இக்பால் உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவ பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News