புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவை பயணிகளை மீட்க கட்டுப்பாடு அறை திறப்பு

Published On 2023-06-03 07:38 GMT   |   Update On 2023-06-03 07:38 GMT
  • விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க புதுவை அரசு கட்டுப்பாடு அறையை திறந்துள்ளது.
  • புதுவையை சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களின் விபரங்களை தெரிவிக்கவும்

புதுச்சேரி:

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் புதுவையை சேர்ந்தவர்களும் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படு கிறது. இதனையடுத்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க புதுவை அரசு கட்டுப்பாடு அறையை திறந்துள்ளது.

இதுதொடர்பாக புதுவை கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசாவில் நடத்த கோரமண்டல் ரெயில் விபத்தில் புதுவையை சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களின் விபரங்களை தெரிவிக்கவும் மற்றும் அவரச உதவிக்கும், புதுவை மாநில அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கீழ்க்காணும் தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும்: 1070, 1077,112, 0413-2251003, 2255996. இந்த அவசரகால மையம் 24 மணி நேரமும் இயங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News