புதுச்சேரி

மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடலை போலீசார் பார்வையிட்ட காட்சி.

கட்டிட தொழிலாளி உடல் கருகி சாவு

Published On 2022-12-23 14:55 IST   |   Update On 2022-12-23 14:55:00 IST
  • தவளக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.
  • ஜல்லி போடுவதற்கு முன்பாக அவர் மாடிக்கு சென்று அந்த இடத்தினை பார்வையிட்டுக்கொண்டி ருந்தார்.

புதுச்சேரி:

தவளக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.

புதுவை-தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் 4 முனை ரோட்டில் முரளி என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் முதல்மாடி தளத்துக்கு இன்று காலை ஜல்லி போடும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கட்டிட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதுபோல் இந்த பணிக்கு புதுவை ஒட்டம் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பலராமன் (வயது52) என்பவர் வந்திருந்தார்.

ஜல்லி போடுவதற்கு முன்பாக அவர் மாடிக்கு சென்று அந்த இடத்தினை பார்வையிட்டுக்கொண்டி ருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் பலராமனின் கை உரசியதாக தெரிகிறது.

இதனால் மின்சாரம் தாக்கியதில் பலராமன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இப்பகுதியில் உயர்மின்னழுத்த கம்பி குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்வதால் பாதிப்பு இல்லாத வகையில் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை மின்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டும், அதனை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் இந்த சம்பவம் நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News