சிவா எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்த காட்சி.
100 நாள் வேலை திட்டத்தில் செம்மன் சாலை அமைக்கும் பணி
- சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.
புதுச்சேரி:
வில்லியனூர் மணவௌி கிராமத்தில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மத்திய அரசின் தூய்மை பாரத் திட்டத்தில் பொது உறிஞ்சுக் குழி (அமைக்க ரூ. 4 லட்சத்து 15 ஆயிரம் மற்றும் வில்லியனூர் எம்.என்.ஆர். நகர், மாதா கோவில் விரிவாக்கம் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் செம்மண் சாலை அமைக்க ரூ. 3 லட்சத்து 61 ஆயிரம் என மொத்தம் ரூ. 7 லட்சத்து 76 ஆயிரம் நிதி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவருமான. சிவா பணியை தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைஷாக் பாகி, உதவிப் பொறியாளர்கள் சந்திரசேகரன், ராமன், இளநிலைப் பொறியாளர்கள் ராமநாதன், செங்கதிர், பணி ஆய்வாளர் ரங்கராஜ், கிராம திட்ட ஊழியர்கள் கலைச்செல்வி, திரிபுரசுந்தரி மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். செம்மன் சாலை அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்