சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
மண் சாலை அமைக்கும் பணி-அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தொடங்கி வைத்தனர்
- வி. மணவௌி கிராமத்திற்குட்பட்ட மணக்குள விநாயகர் நகருக்கு ரூ. 2 லட்சத்து 7 ஆயிரம் என ரூ. 11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் மண்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி அந்தந்த நகரில் நடந்தது.
- அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மண்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூனுக்குட்பட்ட ஒதியம்பட்டு கிராமத்திற்குட்பட்ட ரமேஷ் நகரில் ரூ. 4 லட்சத்து 61 ஆயிரம், ரங்கசாமி நகரில் ரூ. 5 லட்சத்து 9 ஆயிரம் செலவில் மண்சாலை மற்றும் வி. மணவௌி கிராமத்திற்குட்பட்ட மணக்குள விநாயகர் நகருக்கு ரூ. 2 லட்சத்து 7 ஆயிரம் என ரூ. 11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மண்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி அந்தந்த நகரில் நடந்தது.
வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மண்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்டப்பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலக உதவிப் பொறியாளர் இராமன், மணவௌி தர்மராஜ், சபாபதி, தட்சிணாமூர்த்தி, பாலகுரு, ஹரி, வாசுதேவன், கலியபெருமாள், சுப்புராயன், முருகன், ஒதியம்பட்டு மூர்த்தி, வேலவன், கந்தன், விசு, ஏழுமலை.
தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிட துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி துணைச் செயலாளர் அங்காளன், ஜலால், அக்பர், சபரி, தட்சிணாமூர்த்தி, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியன், ஏழுமலை, முருகன், காளி, செல்வம், வெங்கடேசன், ராஜேந்திரன், தயாளன், அன்புநிதி, யோகானந்தம், பாலு, பாலமுருகன், விஜயபாலன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.