புதுச்சேரி

கோப்பு படம்.

கோவிலில் வரவு-செலவு தகராறில் மோதல்

Published On 2022-07-29 12:30 IST   |   Update On 2022-07-29 12:30:00 IST
  • திருக்கனூர் அருகே கோவிலில் வரவு-செலவு தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
  • ரவி குடி போதையில் கோவில் வரிப்பணம் வாங்கிக் கொண்டு திருட்டு கணக்கு காட்டி சொந்த செலவு செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி:

திருக்கனூர் அருகே கோவிலில் வரவு-செலவு தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

திருக்கனூர் அருகே குமார பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஊர் முக்கியஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தில் ஊர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவிலில் வரவு-செலவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி குடி போதையில் கோவில் வரிப்பணம் வாங்கிக் கொண்டு திருட்டு கணக்கு காட்டி சொந்த செலவு செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்.

இதனை மூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்தனர். இதனால் மூர்த்தி தரப்பினருக்கும் ரவிக்கும் வாய்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

இருதரப்பினரும் கைகளால் தாக்கிக் கொண்டனர். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியே காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News