கோப்பு படம்
டீக்கடையில் இரு தரப்பினர் மோதல்
- சத்யமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ஏசுராஜா(வயது35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
- முருகா தியேட்டர் சிக்னல் அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை சண்முகா புரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் சத்யமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ஏசுராஜா(வயது35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று அதிகாலை இவரும், அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ், தாமஸ் ஆகியோர் முருகா தியேட்டர் சிக்னல் அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க வந்தனர்.
அப்போது அங்கு வீமன் நகரை சேர்ந்த குகன்(25), அரவிந்த்(25) மற்றும் திலாஸ்பேட்டை சாய்பாபா நகரை சேர்ந்த சிவபிரியன்(19) ஆகியோரும் டீ குடிக்க வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கையாளும், கல்லாலும் தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் ஏசுராஜா, சிவபிரியன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.