புதுச்சேரி

காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நடந்த போது எடுத்தபடம்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுவை காங்கிரசார் பாதயாத்திரை

Published On 2022-08-09 08:32 GMT   |   Update On 2022-08-09 08:32 GMT
  • வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை யொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகின்றனர்.
  • என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா மாநில அரசை கண்டித்தும் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

புதுச்சேரி:

வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை யொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகின்றனர்.

அதன்படி புதுவை யில் உருளையன்பேட்டை, உப்பளம், ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜனதா அரசை எதிர்த்தும், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா மாநில அரசை கண்டித்தும் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகிலிருந்து தொடங்கிய பாதயாத்திரைக்கு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் இளையராஜா, தனுசு, ரகுமான், மருதுபாண்டியன், வேல்முருகன், லட்சுமணன், குமரன், ஆறுமுகம், ரமேஷ், ஜெரால்டு, ராஜ்மோகன், பஞ்சகாந்தி, விஜயகுமாரி, பிரதீஸ் இருதயராஜ், ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை வெங்கட சுப்பாரெட்டியார் சிலையிலிருந்து புறப்பட்டு கோவிந்தசாலை, காமராஜர் சாலை, நேருவீதி, காந்திவீதி, ரயில்வே நிலையம், உழவர்சந்தை வழியாக மறைமலை அடிகள் சாலை வழியாக மீண்டும் வெங்கடசுப்பாரெட்டியார் சிலையை அடைந்தது.

புதுவையில் பஞ்சாலை களை திறக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை தர வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது என குற்றம்சாட்டியும் பாத யாத்திரை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News