புதுச்சேரி

ரத யாத்திரை புதுவை வந்த போது எடுத்த படம்

ரத யாத்திரை புதுவை வந்தது

Published On 2022-06-10 14:55 IST   |   Update On 2022-06-10 14:55:00 IST
  • புதுவைக்கு ரத யாத்திரை வந்தது
  • சிலை கடத்தல், புதையல் வேட்டை பற்றி கிஷோர் இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதையில் மாயோன் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

சிலை கடத்தல், புதையல் வேட்டை பற்றி கிஷோர் இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதையில் மாயோன் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர் சிபிராஜ், தான்யா ஆகியோர் நடித்துள்ளனர். சிலை கடத்தல் பற்றி திரில்லர் படமாக உருவாக்கப் பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்துக்காக பெருமாள் சிலையுடன் கூடிய ரத யாத்திரை தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது.

சென்னையில் தொடங்கி வேலூரில் இந்த ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. இந்த ரத யாத்திரை புதுவைக்கு வந்தது. புதுவை முருகா திரையரங்கு வந்த ரத யாத்திரைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன. தொடர் ந்து கலைஞ ர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News