புதுச்சேரி

கோப்பு படம்.

சி.பி.சி.ஐ.டி. ஏட்டு தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-01-11 13:33 IST   |   Update On 2023-01-11 13:33:00 IST
  • வில்லியனூரில் சி.பி.சி.ஐ.டி. ஏட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • கடந்த 19 ஆண்டு காவல்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

புதுச்சேரி:

வில்லியனூரில் சி.பி.சி.ஐ.டி. ஏட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை காவல்துறை சி.பி.சி.ஐ.டி. பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் வில்லியனூர் ஜி.என் பாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இவருக்கு வள்ளி என்ற மனைவி, வெங்கடேசன் என்ற மகன், பிரதீபா என்ற மகள் உள்ளனர். பிரதீபா மற்றும் வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 19 ஆண்டு காவல்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத்தில் கல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடி க்கப்பட்டது.

இந்நிலையில், நோய் குணமடைய தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களாக விடுமுறையில் வீட்டிலிருந்த சக்திவேல் வீட்டுக்குள் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு இரும்பு தூணில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சக்திவேல் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சக்திவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News