புதுச்சேரி

ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடைபெற்ற காட்சி.

மாணவர்களுக்கு வளாக நேர்காணல்

Published On 2022-09-22 10:50 IST   |   Update On 2022-09-22 10:50:00 IST
  • புதுவை ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் இந்த ஆண்டிற்கான மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதுவை செண்பகா ஓட்டலில் நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

புதுவை ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் இந்த ஆண்டிற்கான மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதுவை செண்பகா ஓட்டலில் நடைபெற்றது.

இதில், கோவை லீ ராயல் மெரிடியன் 5 நட்சத்திர ஒட்டலின் சார்பில் மனிதவள மேலாளர் சுகந்தி கவுதம் மற்றும் உணவு தயாரிப்பு உபசரிப்பு துறை மேலாளர் ரிஷப் சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர்.

நிகழ்ச்சிக்கு ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் மேற்பார்வையில் ஆசிரியர்களும் மாணவர்களும் செய்தி–ருந்தனர்.

Tags:    

Similar News