நிறுவன பதிவு முகாமில், வர்த்தக சபை தலைவர் குணசேகரன், தொழிலாளர் துறை அதிகாரி கண்ணபிரான் ஆகியோர் பங்கேற்ற காட்சி.
வர்த்தக நிறுவன பதிவு, புதுப்பித்தல் சிறப்பு முகாம்
- கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவக நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு மற்றும் புதுப்பித்தல் சிறப்பு முகாம் வர்த்தக சபையில் தொடங்கியது.
- புதுப்பித்தலுக்கு கடை நிறுவன பதிவு சான்றிதழ் எடுத்து வர வேண்டும். இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதுச்சேரி:
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவக நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு மற்றும் புதுப்பித்தல் சிறப்பு முகாம் வர்த்தக சபையில் தொடங்கியது.
வர்த்தக சபையின் தலைவர் குணசேகரன், தொழிலாளர் நல அதிகாரி கண்ணபிரான், வர்த்தக சபையின் துணைத்தலைவர் ரவி, பொதுச்செயலாளர ஆனந்தன், இணைச்செ யலாளர் முகம்மது சிராஜ், குழு உறுப்பினர்கள் ஞானசம்பந்தம், குமார், உறுப்பினர் ராஜா தண்டபாணி உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
முகாமுக்கு வரும் உரிமையாளர்கள் எடுத்து வர வேண்டிய ஆவணங்கள் குறித்து வர்த்தக சபை தலைவர் குணசேகரன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிறுவனங்களின் உரிமை யா ளர்கள்,வியாபாரிகள் புதிதாக பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் வரும்போது தவறாமல் கீழ்க்கண்ட அசல் ஆவணங்களை கொண்டு வர வேண்டும். கடை, நிறுவன உரிமையாளரின் அடையாளச் சான்று பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை கடை, நிறுவனத்தின் முகப்பு புகைப்படம். பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்.
மேலும் கடை, நிறுவனத்தின் சட்டப்பூர்வ பயன்பாட்டிற்கான ஆதாரம் குத்தகை அல்லது வாடகை பத்திரம், தொழிலாளர்களின் பெயர், தந்தை பெயர், வயது, பணியில் சேர்ந்த தேதி, செய்யும் வேலை, வார விடுமுறை போன்றவை உரிய பதிவு கட்டணம்.
புதுப்பித்தலுக்கு கடை நிறுவன பதிவு சான்றிதழ் எடுத்து வர வேண்டும். இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு குணசேகரன் அறிக்கையில் கூறியுள்ளார்.