புதுச்சேரி

பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் செல்வகணபதி எம்.பி. பேசிய காட்சி. அருகில் மாநில தலைவர் சாமிநாதன் உள்ளார்.

கிளை கூட்டங்களை நடத்த வேண்டும்-மாநில தலைவர் சாமிநாதன் அறிவுறுத்தல்

Published On 2023-01-07 04:56 GMT   |   Update On 2023-01-07 04:56 GMT
  • புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
  • இக்கூட்டத்தில், பா.ஜனதா மாநில தலைவர் பேசும்போது வருகிற 16 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தாகவும், மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைக ளிலும் கூட்டம் நடத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். செல்வகணபதி

எம்.பி., பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜனதா நிர்வாகிகள் தங்க. விக்ரமன், செல்வம், முருகன், அருள்முருகன் மற்றும் மாநில செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.

இக்கூட்டத்தில், பா.ஜனதா மாநில தலைவர் பேசும்போது வருகிற 16 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தாகவும், மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைக ளிலும் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், மாத தோறும் நடைபெறும் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் உள்ள அனைவரும் பார்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News