வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
பா.ஜனதா இளைஞர் அணி ரத்த தானம் முகாம்
- பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி புதுவை நகர மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
- மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நடந்த இந்த முகாமுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி புதுவை நகர மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நடந்த இந்த முகாமுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், நகர மாவட்ட செயலாளர் விஜய ராஜேஷ், தொகுதி தலைவர்கள் ஹரிதாஸ், நாகராஜ், இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் பொதுச் செயலாளர்கள் செந்தில், சத்யா, அரவிந்த் செயலாளர் வாசகி, இளைஞர் அணி தொகுதி தலைவர்கள் விக்னேஷ், வேல்முருகன், முத்தியால்பேட்டை இளைஞரணி செயலாளர் அரவிந்த் மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர்.