பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
- திருபுவனை தொகுதி பா.ஜனதா சார்பில் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- புதுவை மாநில சட்டசபையில் முழு பட்ஜெட் அறிவிக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதி பா.ஜனதா சார்பில் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருபுவனை தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பாலகுமார், செயலாளர் மோகன்ராஜ், பயிற்சி தலைவர் அமரீத், சத்யநாராயணன், விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு கூட்டத்துக்கு புதுவை பா.ஜனதா மாநில செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஆனந்தன், மாநில விவசாயி தலைவர் புகழேந்தி, பயிற்சி அணி தலைவர் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, பாஸ்கரன், எஸ்.சி. அணி செயலாளர் வீரப்பன், மாவட்ட விவசாயி தலைவர் சச்சிதானந்தம் ஆகியோர் பேசினார்கள்.
மதகடிப்பட்டு வார சந்தை தரம் உயர்த்தப்பட்டது, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கியது, திருபுவனை தொகுதியில் புதிய சாலை அமைத்து வருவது, புதுவை மாநில சட்டசபையில் முழு பட்ஜெட் அறிவிக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இளைஞர் அணி செயலாளர் விக்ரம் நன்றி கூறினார்.