புதுச்சேரி

பாரதமாதா சிலை ஊர்வலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், எம்.எல்.ஏ. க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் ஆகியோர் தேசிய கொடி ஏந்தி வந்த காட்சி.

பா.ஜனதா சார்பில் பாரதமாதா சிலை ஊர்வலம்

Published On 2022-08-11 09:12 GMT   |   Update On 2022-08-11 09:12 GMT
  • பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் பா.ஜனதாவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
  • அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இசைக்குழுவினர் வந்தே மாதரம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை பாடி சென்றனர்.

புதுச்சேரி:

75-வது சுதந்திர தினத்தை அமுத பெரு விழாவாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் பா.ஜனதாவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக காலாப்பட்டு கனகசெட்டி குளத்தில் பாரதமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக புதுவை நோக்கி புறப்பட்டது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பாரதமாதா சிலையை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பாரதமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இசைக்குழுவினர் வந்தே மாதரம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை பாடி சென்றனர்.

பாரதமாதா சிலை பேரணியில் கையில் தேசிய கொடி ஏந்தி அமைச்சர் சாய். ஜெ.சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., ஜான்குமார், எம்.எல்.ஏ. பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், செல்வம், முருகன், பட்டியல் அணி மாநிலத் தலைவர் தமிழ்மாறன், காலாப்பட்டு கண்ணன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏந்தி காலாப்பட்டு, பிள்ளைசாவடி, கோட்ட குப்பம், லாஸ்பேட்டை வழியாக விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தனர்.

Tags:    

Similar News