புதுச்சேரி

கோப்பு படம்.

ஏனாமில் வெள்ள பெருக்கை தடுக்க தடுப்புச்சுவர்- முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி

Published On 2022-08-04 13:51 IST   |   Update On 2022-08-04 13:51:00 IST
  • புதுவையின் பிராந்தியமான ஏனாம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது ஏனாம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
  • ஏனாமில் உள்ள 11 ஆயிரத்து 533 சிகப்பு ரேஷன்கார்டுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம்,

புதுச்சேரி:

புதுவையின் பிராந்தியமான ஏனாம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது ஏனாம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏனாம் நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏனாமில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அறிவித்தபடி ஏனாமில் உள்ள 11 ஆயிரத்து 533 சிகப்பு ரேஷன்கார்டுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம், 25 கிலோ அரிசி வழங்கப் படும். 4 ஆயிரத்து 195 மஞ்சள் கார்டுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 வழங்கப்படும்.

இந்த நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசாணை பிறப் பிக்கப்பட்டுள்ளது.

வெள்ள சேதங்களை அதிகாரிகள் பார்வையிட்டு அறிக்கை அளித்தவுடன் நிவாரணம் வழங்கப்படும். வரும்காலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்புச்சுவர் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசின் தடையில்லா சான்றிதழ் பெறவும் ந டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவு 3-ல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News