புதுச்சேரி

இலவச பயிற்சி முகாமில் சிவா எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

சிபாரிசின்றி வங்கி கடன் - சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2022-07-15 09:37 GMT   |   Update On 2022-07-15 09:37 GMT
  • பராமரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த 60 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு வில்லியனூர் எஸ்.எஸ்.நகரில் தொடங்கியது.
  • பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே கடன் உள்ளிட்ட வங்கி திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கிறது.

புதுச்சேரி

இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 25 ஏழை பெண்களுக்கு 'பசு மித்ரா' என்ற தலைப்பில் கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த 60 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு வில்லியனூர் எஸ்.எஸ்.நகரில் தொடங்கியது. பயிற்சி முகாமை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்து பேசியதாவது:-

பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே கடன் உள்ளிட்ட வங்கி திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கிறது. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே வங்கியின் தலைமை நிர்வாகத்தில் உள்ளனர். இவர்களுக்கு புதுவை மக்கள் பேசக்கூடிய தமிழ் தெரிவதில்லை. இதனால் மக்கள் தங்களது தேவைகளை தெளிவாக கூறினாலும், அதை வங்கி அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

இந்த நிலை மாற வேண்டும். தகுதியான நபர்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்டவைகள் சிபாரிசின்றி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அமிர்தவள்ளி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், டாக்டர்கள் குமணன், கவுதமன் மற்றும் புதுவை மாநில விடுதலை சிறுத்தைகளின் செயல் தலைவர் தேவ. பொழிலன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News