புதுச்சேரி

கூட்டத்தில் ஜி.கே.மணி பேசிய போது எடுத்த படம்.

தமிழை தேடி விழிப்புணர்வு பிரசாரம்-டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார்

Published On 2023-02-08 10:42 IST   |   Update On 2023-02-08 10:42:00 IST
  • பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக புதுவை வருகிறார்.
  • தமிழைத்தேடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வருகிற 21-ந் தேதி சென்னையில் தொடங்கி 28-ந் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார்.

புதுச்சேரி:

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக வருகிற 23-ந் தேதி புதுவை வருகிறார்.

இதுகுறித்து ஆலோசனைக்கூட்டம் கவுண்டம்பாளையம் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. பா.ம.க. அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார். கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் வடிவேல், மதியழகன், வன்னியர் சங்க தலைவர் துரை, செயலாளர்கள் முருகன், நாவப்பன், இளைஞரணி சேகர், புருஷோத்தமன், மகளிரணி இபெல், ஜோதி, மீனவரணி உத்திராடம் உட் பட பலர் பங்கேற்றனர்.

இதன்பின் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழைத்தேடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வருகிற 21-ந் தேதி சென்னையில் தொடங்கி 28-ந் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார். 3-ம் நாளான 23-ந் தேதி 10 மணிக்கு புதுவை கம்பன் கலையரங்கில் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.

அரசியல்சார்பற்ற நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழை மீட்க வலியுறுத்தி பிரச்சாரம் நடக்கிறது. தமிழகம், புதுவையில் தொழில் நிறுவனங்கள் பெயர் பலகையில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.

இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.

Tags:    

Similar News