புதுச்சேரி

கோப்பு படம்.

மீனவர் மீது தாக்குதல்

Published On 2022-10-26 10:31 IST   |   Update On 2022-10-26 10:31:00 IST
  • வம்பாகீரப்பாளையத்தி ல் சண்டையை சமாதானம் செய்த மீனவரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • அப்போது செல்லுபூச்சி நீ என்ன எங்களை சமாதானம் செய்வது என கூறி மதியழகனை கையால் தாக்கினார்.

புதுச்சேரி:

வம்பாகீரப்பாளையத்தில் சண்டையை சமாதானம் செய்த மீனவரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதி என்ற மதியழகன் (வயது26). மீனவர். இரவு இவர் கடற்கரைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே வந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்லுபூச்சி என்ற செல்வமுருகனும், அருள் என்பவரும் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொண்டி ருந்தனர். இதனை பார்த்த மதியழகன் சண்டையை சமாதானம் செய்ய முன்றார்.

அப்போது செல்லுபூச்சி நீ என்ன எங்களை சமாதானம் செய்வது என கூறி மதியழகனை கையால் தாக்கினார். இதனை மதியழகன் தட்டிக்கேட்ட போது செல்லுபூச்சி அங்கு கிடந்த கல்லை எடுத்து மதியழகன் தலையில் தாக்கினார்.

மேலும் அங்கு வந்த செல்லுபூச்சியின் மகன்களான காளியப்பன், அஜித் மற்றும் செல்லுபூச்சியின் மனைவி அஞ்சாலாட்சி ஆகியோரும் சேர்ந்து மதியழகனை தாக்கினர். இதனால் வலி தாங்காமல் மதியழகன் அலறவே செல்லுபூச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மதியழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் இதுகுறித்து மதியழகன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News