புதுச்சேரி
கைவினை கலைஞர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பரிசு வழங்கிய காட்சி.
கைவினை பொருள் கண்காட்சியில்ரூ.84 லட்சம் பொருட்கள் விற்பனை
- புதுவை தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் இணைந்து கடற்கரை சாலை காந்தி திடலில் நடத்திய கைவினை பொருள் கண்காட்சியை 14 நாட்கள் நடந்தது.
- கண்காட்சி நிறைவு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கைவினை கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் இணைந்து கடற்கரை சாலை காந்தி திடலில் நடத்திய கைவினை பொருள் கண்காட்சியை 14 நாட்கள் நடந்தது.
இதில் கலைஞர்களின் பொம்மை கள், தோல் பொருட்கள், மரப்பொ ருட்கள் என ரூ.84 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகியுள்ளன.
கண்காட்சி நிறைவு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கைவினை கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தொழில்துறை இயக்கு னர் யாசம்ரெட்டி வரவேற்றார். துணை இயக்குனர் மோகன்குமார் நன்றிகூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தொழில் மைய துணை இயக்க மேலாளர் அரங்கநாதன், ஜெயராமன், உதவி இயக்குனர்கள் முத்துகிருஷ்ணன், தனகோவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.