புதுச்சேரி

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் ஆலேசானை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

சட்டசபை பொது கணக்குகுழு கூட்டம்

Published On 2022-06-10 15:32 IST   |   Update On 2022-06-10 15:32:00 IST
  • கணக்குகுழு கூட்டம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது
  • ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவை மாநில அரசு அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் கணக்காய்வு துறைக்கு சமர்ப்பிக்கப் படாமல் உள்ள கணக்கு அறிக்கைகள் குறித்தும் கணக்காய்வு அலுவலகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் இருப்பது குறித்தும் அதுதொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுக் கணக்கு குழு தலைவர் கே. எஸ். பி. ரமேஷ் எம்.எல்.ஏ. புதுவை அரசின் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, நிதித்துறை செயலர் பிரசாந்த், கோயல் தமிழ்நாடு மற்றும் புதுவை முதன்மை கணக்காய்வு தலைவர் அலுவலக தணிக்கை அதிகாரிகள் ,முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி அருண், சட்டப்பேரவை செயலர் முனுசாமி, சபாநாயகரின் தனிச் செயலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கணக்காய்வு துறைக்கு சமர்ப்பிக்கப் படாமல் உள்ள கணக்கு அறிக்கைகள் மற்றும் கணக்காய்வு துறைகளுக்கு உரிய பதில் அளிக்காதது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பொது கணக்கு குழு தலைவர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் முன்னிலையில் அனைத்து அரசுத் துறை செயலர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தை விரைந்து கூட்டுவது என்றும் அக்கூட்டத்தில் கணக்காய்வு அறிக்கைகள் குறித்து விரிவாக விவாதிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

Tags:    

Similar News