கோப்பு படம்.
- புதுவை கோரிமேடு இஸ்ரவேல் நகரை சேர்ந்த வர் அய்யனார்
- திருக்கனூர் அருகே சந்தை புதுகுப்பத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு இஸ்ரவேல் நகரை சேர்ந்த வர் அய்யனார் (வயது31). இவரது மனைவி ஐஸ்வர்யா (21). நேற்று அய்யனார் தனது மனைவியுடன் திருக்கனூர் அருகே சந்தை புதுகுப்பத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த ஐஸ்வர்யாவின் அக்காள் கணவரான முத்தால்ராயன் என்பவர் அய்யனாரை தகாத வார்த்தைகளால் திட்டி ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டார். இதனை அய்யனார் தட்டிக்கேட்ட போது அவரை முத்தால்ராயன் அங்கிருந்த தடியை எடுத்து அய்யனாரை தாக்கினார்.
இதனை தடுக்க முயன்ற போது ஐஸ்வர்யாவையும் அவர் தாக்கினார். இந்த தாக்குதலில் காயமடைந்த அய்யனார் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து அய்யனார் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.