கோப்பு படம்.
null
- சேதராப்பட்டில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி வாலிபரை வழிமறித்து தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கு இறுதி சடங்கு முடித்து விட்டு பின்னர் தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
சேதராப்பட்டில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி வாலிபரை வழிமறித்து தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேதராப்பட்டு அருகே தமிழக பகுதியான பூத்துறை பாரதி வீதியை சேர்ந்தவர் அன்பு (வயது23). இவர் பி.எஸ்.சி. படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.
இவர் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வானூருக்கு சென்றார்.
அங்கு இறுதி சடங்கு முடித்து விட்டு பின்னர் தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
சேதராப்பட்டு போலீஸ் நிலையம் எதிரே தனியார் கல்லூரி அருகே வந்த போது வானூர் காலனியை சேர்ந்த ஈழவேந்தன் என்பவர் திடீரென அன்புவை வழி மறித்தார்.
இதையடுத்து அன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவரை ஈழவேந்தன் சரமாரியதாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அன்புவும், அவரது தாய் கஸ்தூரியும் அலறல் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே ஈழவேந்தன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அன்பு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து சேதராபட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.