புதுச்சேரி

கோப்பு படம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்

Published On 2022-11-13 08:03 GMT   |   Update On 2022-11-13 08:03 GMT
  • புதுவை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த வாரம் மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
  • புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, 8.30 மணிமுதல் 8.30 மணிவரை 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

புதுச்சேரி:

புதுவை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த வாரம் மழை பெய்தது.

இந்தநிலையில் கடந்த வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் கடலோர மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் பலத்த மழை பெய்தது. புதுவையில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய மழை நேற்று வரை கொட்டி தீர்த்தது.

இதனால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. ரெயின்போநகர், பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், லம்போர்ட் சரவணன் நகர், புஸ்சி வீதி, பட்டேல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அபிசேகப்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த வீரப்பன் என்பவரது வீட்டின் பின் சுவர் இடிந்து விழுந்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். நள்ளிரவு முதல் வரை விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் பகல் முழுவதும் லேசான வெயிலுடன் மழை இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் மீண்டும் முதல் மழை விட்டு விட்டு பெய்தது காலை 8 மணி வரை மழை பெய்த பின்னர் சூரியன் சிறிது சிறிதாக தலை காட்ட ஆரம்பித்தது. இதனிடையே தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டினர். அதன்படி ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதேபோல் மழையினால் சேதமடைந்த சாலைகளில் ஜல்லி, மண்கொட்டி சீர்செய்யும் பணியும் நடந்தது. மழை இல்லாததால் புதுவை வந்த சுற்றுலா பயணிகளும் நகரை வலம் வந்தனர். காவல் துறையின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளித்தவர்களை அப்புறப்படுத்தினர். மழையால் முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, 8.30 மணிமுதல் 8.30 மணிவரை 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக நகர பகுதியில் 17.8 செ.மீ. பதிவாகி இருந்தது. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மழை சேதங்களை பார்வையிட்டார். வில்லியனூர், அரியூர் திருவண்டார் கோயில், மதகடிப்பட்டு, கே.டி குப்பம், குச்சிபாளையம், பி. எஸ். பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் பார்வையிட்ட அவர் மழை சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் விசாரித்தார். 

Tags:    

Similar News