புதுச்சேரி

கோப்பு படம்

சலுகைகளுடன் புதிய தொழில் கொள்கையை அறிவியுங்கள் எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சு

Published On 2022-08-31 14:48 IST   |   Update On 2022-08-31 14:48:00 IST
  • புதுவை மக்கள் நலன் கருதி அடுத்த முறையேனும் சட்டசபையை 20 நாட்கள் நடத்துங்கள் குறைந்த நாட்கள் நடத்துவதன் மூலம் அதிகாரிகளுக்குத்தான் வாய்ப்புகளை உருவாக்கி தருகிறீர்கள்.
  • ஏற்கனவே அதிகாரிகள் அரசு, உங்கள் அரசு என்று இரண்டு நடை பெறுகிறது

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:-

புதுவை மக்கள் நலன் கருதி அடுத்த முறையேனும் சட்டசபையை 20 நாட்கள் நடத்துங்கள் குறைந்த நாட்கள் நடத்துவதன் மூலம் அதிகாரிகளுக்குத்தான் வாய்ப்புகளை உருவாக்கி தருகிறீர்கள். ஏற்கனவே அதிகாரிகள் அரசு, உங்கள் அரசு என்று இரண்டு நடை பெறுகிறது.

நான் முதல் முறை எம்.எல்.ஏ., வானபோது சட்டசபைக்கு முதலில் பழைய பல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலும், பின்னர் பழைய துறை முகத்திலும், அதற்கு அடுத்து தற்போதைய முதல்வரும் பூமி பூஜை போட்டனர்.

தற்போது 4-வது ஒரு பூஜை போட உள்ளீர்கள். ஆனால் எங்கு அமையப்போகின்றது என்பது தெரியவில்லை. சுற்றுலாவிற்கு வரும் மக்கள் பார்க்கும் வகையில் அழகிய கட்டிடமாக கட்டுங்கள்.

புதுவையில் இருந்த 750 கூட்டுறவு நிறுவனங்களில் 500 மூடப்பட்டு, தற்போது 250 மட்டுமே உள்ளது. கடந்த முறை கூட்டுறவுக்கு 70 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரூ.17 கோடி குறைத்து, 53 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை அமைக்க சலுகை விலையில் நிலம், ஜி.எஸ்.டி. ஷேரில் பங்கு, வருமான வரியில் சலுகை உள்ளிட்டவைகளுடன் புதிய தொழிற்கொள்கையை அறிவிக்க வேண்டும்.சலுகைககள் வழங்கி வழங்கி புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தால் ரூ.2 ஆயிரம் கோடி கூடுதலாக வரி ஈட்ட முடியும். இவ்வாறு சிவா பேசினார்.

Tags:    

Similar News