கோப்பு படம்.
ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
- வில்லியனூரில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- வில்லியனூரில் உள்ள ராம்பரதேசி சித்தர் கோவில் மற்றும் வில்லியனூர் ரெயில் நிலையத்துக்கு சென்று வருவது வழக்கம்.
புதுச்சேரி:
வில்லியனூரில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் தில்லைநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கல்யாண பாண்டியன்(வயது75). இவருக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி அவர் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
கார் டிரைவராக வேலை செய்து வந்த கல்யாணபாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக அந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் அவ்வப்போது வில்லியனூரில் உள்ள ராம்பரதேசி சித்தர் கோவில் மற்றும் வில்லியனூர் ரெயில் நிலையத்துக்கு சென்று வருவது வழக்கம்.
அதுபோல் கல்யாணபாண்டியன் வீட்டில் சாப்பிட்டு சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். இந்த நிலையில் 3¼ மணிக்கு கல்யாணபாண்டியனின் மனைவி கமலாவுக்கு ஒருவர் போன் செய்து பேசினார். அப்போது கல்யாணபாண்டியன் ரெயிலில் அடிப்பட்டு கிடந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கமலா உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்யாணபாண்டியன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கல்யாணபாண்டியன் புதுவை-திருப்பதி ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி கமலா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.